Codex

Interested in functions, hooks, classes, or methods? Check out the new WordPress Code Reference!

நிறுவுவதற்கு முன்னர்

வேர்ட்பிரஸினை நிறுவுவதற்கு முன்னர் நீங்கள் உங்கள் இணைய வழங்கியில் அதனை நிறுவமுடியமா என சரிபார்த்து கொள்ள வேண்டி உள்ளதோடு, தேவையான சில திறமைகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இவ்விரண்டும் பெரிதாக பிரச்சனை ஒன்றும் தரப்போவதில்லையாயினும், முதலிலேயே சரிபார்த்துக் கொள்ளுவது நலம்.

வழங்கியின் தேவைகளை சரிபார்த்துக் கொள்ள, Hosting WordPress இனை பாருங்கள். the official requirement page இலும் நீங்கள் இதனை சரிபார்த்துக் கொள்ளலாம்.

பிரதான Configuration கோப்பினை தொகுப்பதற்கு text editor ஒன்றினை எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு வின்டோஸ் பாவனையாளர் ஆயின் Notepad இனை பயன்படுத்த முடியும். பின்னர் உங்கள் வார்ப்புருக்களை நீங்கள் மேம்படுத்தும்போது, அதனை உங்கள் நிருவாக முகப்பூடாக நீங்கள் செய்யமுடியுமாயினும், ஒரு சிறந்த Text eidtor மிக்க பயனுள்ளதாயிருக்கும். (வின்டோஸிற்கு இலவச திறமூல Notepad++ ஒரு நல்ல text editor ஆகும்.)

வேர்ட்பிரஸ் கோப்புக்களை உங்கள் வழங்கியினுள் தரவேற்றுவதற்கு ஒரு FTP மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் "கோப்பு அனுமதிகளை (File permissions)" இனை எவ்வாறு மாற்றுவது என்றும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நீங்கள் FileZilla இனை பயன்படுத்த முடியும்.

இப்பொழுது நீங்கள் வேர்ட்பிரஸை நிறுவ தயாராகிவிட்டீர்கள்.